எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
எத்தனை நாட்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எத்தனை நாட்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 மார்ச், 2016

எத்தனை நாட்கள்..



என் காதுகள் எத்தனை நாட்கள்
காத்திருக்கும் -
உன் குரலின் ஜலதரங்கத்துக்காய்.

என் கண்கள் எத்தனை நாட்கள்
பூத்திருக்கும். -
உன் வரவின் தரிசனத்துக்காய்.

என் சுவாசம் எத்தனை நாட்கள்
தவித்திருக்கும் –
உன் வாசத்தை நிரப்பிக் கொள்ள.

என் உதடுகள் எத்தனை நாட்கள்
பசித்திருக்கும் -
உன் உதடுகளில் பசியாறுவதற்கு.

என் மேனி எத்தனை நாட்கள்
துடித்திருக்கும் -
உன் அணைப்பில் அடங்குவதற்காய். 


-- 95 ஆம் வுடைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...