எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அவள் இருந்த இடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவள் இருந்த இடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 டிசம்பர், 2016

அவள் இருந்த இடம்.

வாய்க்கால்களின் கொண்டைகளில்
வண்ணக் கண்ணாடித் தாள்கள்.
 
தவித்து மூச்சு வாங்குகிறாள்
நீராட்ட வருபவள்.


மண்ணள்ளிச் சேர்த்த கட்டிடங்கள்
மிதந்து கொண்டிருக்கின்றன
நதியின் கருப்பைக்குள். 



மலர்ந்திருந்தவளை மலடாக்கிவிட்டு
நீர்ப்புணர்ச்சி வேண்டித் தவம்.



நீர்த்துப் போய் நீளமாய் வீழும்
அவள் கண்ணீர் கலங்கலாய்த்
தலைகுப்புற வீழ்கிறது கடலுக்குள்.



நீராடுமுன் கைநிறைய நீரள்ளி
அவளுக்கும் அளியுங்கள் பிண்டம்.



இது அவள் இருந்த இடம் என
தடம் குறித்து வைப்போம் வரைபடங்களில்.

Related Posts Plugin for WordPress, Blogger...