எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அர்க்க புஷ்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்க்க புஷ்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

அர்க்க புஷ்பம்.

யாரும் தொடுவதில்லை
தொட்டாலும் முறிக்கிறார்களென
பால் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது
எருக்கஞ்செடி.

நம்பிக்கை கொடுத்து
மாலையாக்கி மார்பில்
அணிந்து கொண்டது களிறு.

வடக்கின் வேரில்
செதுக்கி வழிபட்டால்
பீடை ஒழியுமென்று
பிள்ளையாரைப் பிடிக்கிறார்கள்.

விக்கினங்கள் தீருமென்று
பூசிப்போரைப் பார்த்து
விநாயகரைப் போலுருவில்
முறுவலித்து கிடக்கிறது
அர்க்க புஷ்பம்.

Related Posts Plugin for WordPress, Blogger...