எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 மார்ச், 2016

உறக்கம் கலையுமா ?



உறக்கம் கலையுமா ?

இதுதான் வாழ்க்கை
இதுதான் சொர்க்கம்
இதுதான் மனைவி பிள்ளை

இது வீடா தெருவா
இது நாயா கயிறா
இது கண்னிப்பெண்ணா கம்பமா

மிதப்பின் மயக்கங்கள்
இது குடித்தவனின் தடுமாற்றம்
தடம் மாற்றம் மட்டுமல்ல
புதிதாய் வெளிக்கிளம்பியிருக்கும்
’நா ஒரே ஒரு தம்மடிச்சேன்
ஒண்ணும் புரியல ‘யின்
போதை வஸ்துக்களின் பல்லிளிப்புகள்
விதை ஒன்று விதைக்க
இங்கு முளைத்திருப்பது
போதையிலைச் (கஞ்சாச்) செடியல்லவா ?
வாலிபமே
உன்னுள்ளே மயக்கங்கள்
குழப்பங்கள்
விரக்தியின் எல்லையில்
சுயபரிதாபத்தைத் தவிர்ப்பதாகச்
சொல்லிக்கொண்டு
போலியின் அபஸ்வரங்கள்
உன் வாழ்க்கையில் ஏனிந்த
நாதக் குழப்பம்?
உன் கரங்களால்தான்
இந்த எதிர்கால நாடு
சிலந்திக்கூட்டு மயக்கங்களில்
பின்னிக்கொண்டு
தள்ளாட்டக் கூடாரமாய்
தலைகுப்புறப் போகிறதோ
நீ உன்னைமட்டும்
அழித்துக்கொள்ளவில்லை
அனைத்துயும்
அழியவைக்கிறாய்
உன் மேல் வைத்த நம்பிக்கை
அபிமானம், கௌரவம்
அனைத்தையும்
காற்றில் பறக்கவிட்டுவிட்டு
உன் மங்கல் கண்களால்
நோக்கிக் கேட்கின்றாய்
“நானிருக்கும் சொர்க்கத்தில்
எப்படி வந்தன
இத்தனை நாய்க்குட்டிகளென்று /”
(அவைகள்தானே நம் நாட்டின் தெருராஜாக்கள்)
வெட்கமாயில்லை உனக்கு
ஏனிப்படிக் கூரையில்லாக்
குடிசையானாய் ( குட்டிச்சுவராய்)
ஏனிப்படி விலை கொடுத்து
நோய் வாங்கும் பரத்தையானாய்
ஏனிப்படி நடுக்காட்டின்
பொட்டல் வெளியாய்த்
தரிசுநிலமாய் ஆனாய்
தூசிபடிந்த வீணையல்ல நீ
ஆனால் மாசுபடிந்துவிட்டதே
உன்மீது உன் வர்க்கத்தின் மீது.
அதைத் துடைத்தெழவாவது
புறப்படு வாலிபமே
உன்னையே அக்கினியில்
புரட்டித் தூய்மைப்படுத்து
புரட்சி வழி புதுமையென்றாலும்
அன்புவழி அனைத்தையும் சாதிக்கும்.
நீ மகான் அல்லதான்
ஆனால் உன்னால் முடியும்
முயன்று பார்.
உன்னால் மகானாக
ஆகமுடியாவிட்டாலும்
மனிதனாகவாவது ஆகமுடியும்
உன் சிதைந்த் வீணைத் தந்திகளை
மனக் கம்பியில் இழுத்து
இறுக்கக் கட்டிவை
மன உறுதியை மட்டும்
மறவாமல் கைக்கொள்
நீ ஓடிப்போன பெண்ணென்றாலும்
ஒழுங்காய்க் குடித்தனம் செய்தால்
உன் மேல் விழுந்து புரண்டு விளையாடும்
வெட்கங்கெட்ட மன்னிக்கும்
மாண்புமிக்க இந்தச் சமுதாயம்.
நானொரு அகிம்சாவாதி
உன்னிடம் கேட்கின்றேன்
தயவுசெய்து எனக்காக இந்த
மயக்கத்தை விட்டொழிக்க மாட்டாயா
விட்டுவிடு..!

-- 83 ஆம் வருட டைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...