எங்கே போயின அவை.
நீருக்காக ஏங்கும் வேர்கள்
வேருக்காய்த் தவிக்கும் நீர்.
அஸ்திவாரக் கல் பாறை
அமுக்கமாய்க் கிடக்கிறது.
குட்டை கரைமோதிக்
கரைமோதிக் கலக்கமாய்ப் புலம்பும்.
வேர்கள் நீருக்காய்
மண் துழாவும்.
கரம்நீட்டிக் கரம்நீட்டிச்
சுயமிழந்து யாசிக்கும்.
கல்லைத் தொட்டவுடன்
வேர்கள் நீருக்காய்
கல் தடவும் கல்தடவும்.
அலைமோதும் நீர்
உறிஞ்சும் கடமை மறந்து.
கல்லுக்குள் நீ உரிக்க
முயலும் வேர்.
அஸ்திவாரக் கல்பாறை
நமுட்டுத்தனமாய்ச் சிரிக்கும்.
விவகாரம் புரியாமல்
நீர் புரளும் மண்ணில்
கட்டிப்பிடித்து அழும்.
எங்கே போயின அவை
நீருக்காக ஏங்கும் வேர்கள்
வேருக்காகத் தவிக்கும் நீர்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
6 கருத்துகள்:
எல்லாம் நம்மால் தான்...!
ஆம் டிடி சகோ
என்ங்கே போயின வேர்கள்? சுயநலமிக்க மாந்தர்கள் நம்மால்தான்..பேராசையினால் பூமி சுருங்குகின்றது!!
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
ஆம் துளசி சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))