சர்வாதிகாரங்கள்:-
வல்லூறுகள்
நோட்டம் பார்த்து
சதையைப் பிடுங்கும்
மௌனயோகியாய்
வேஷமிட்டு
சிறகசையாமல்
மெல்லப் பறந்து
பூ பூக்கும் நேரம்
பார்த்துக்கிட்டவந்து
வாசம் பார்த்துக்
கொத்திக் குதறும்
வல்லூறுகள்
வட்டமிடும்
நெடுந்தூரம்
மேல் பறந்து
வட்டமிடும்
இருப்பதே தெரியாமல்
திடீரென வந்து
இரையைப் பற்றி
சத்தமாய்ச் சதையுடன்
சேர்த்துத் தின்னும்
உயிரைத் தின்று
உடலைத் துர்நாற்றமாக்கிக்
கொள்ளும்
அசிங்கம்பிடித்த வல்லூறுகள்.
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
ஒப்பிட்ட விதம் அருமை... உண்மை...
நன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))