ஒவ்வொரு
தலையாகக் கொய்து போடுவது
பூக்களைப் பிடுங்கி எறிவதுபோல.
குப்பைக்கூளமாய் ரத்தச்சேறுடன் கிடக்கும் தலைகள் நடுவே
கபால மாலைகளுடன் சுற்றித் திரியும் பைரவி .
நேற்றைத் தலை மிகப் பெரிது.
ஞானமும் அறிவும் தெளிவும்
அன்பும் மிகுந்த கனமான தலை.
வெட்ட நினைக்கும்போது முடியாமல்
அறுக்க வேண்டிவந்தது.
வெட்ட வெட்ட துளிர்த்துக் கொண்டிருந்த அதையும்
நறுக்கிக் கோர்த்து மாலையில் மாட்டினாள் பைரவி..
அது அவள் தலை.
தலையற்றுத் தலைகள் சுமந்தவள்.

3 கருத்துகள்:
பயமுறுத்தாதீங்க...
ஹாஹா டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))