தேடல்
மண்குதப்பி
மண்புழு அலைகின்றது.
வயலடிப்புற
நீர்க்கசிவுகளுக்குள் புதைந்து
மண் தாது உண்ண
நெடுந்தூர யாத்திரை
வெளிச்சப் பாதுகை
மிதித்துப்போன பின்பும்
உடல் இழுத்துப் பயணம்
மணல்களின் வெண்பாதம்
ஒதுக்கி
மழைநீர்க்கு அலையும்
சாகரமாய்த்
தெரியாத கேள்வியையும்
புரியாத பதிலையும்
சேர்த்துக் காணாமல் போக்கித்
தவிக்கிறது.
மண்ணுமிழ்ந்து
மண் தின்று
மண்ணுளிப் பாம்பு அலைகின்றது.
3 கருத்துகள்:
அருமையான ஒப்பீடு...
நன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))