எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஜூன், 2015

இலட்சியம் :-



இலட்சியம் :-

பி எஸ் ஸி முடித்து
எம் எஸ்ஸி படித்து
எம் ஃபில்லைக் கடந்து
பி ஹெச் டி பண்ண வேண்டும்.

ஐயோ அப்ளைட்
கெமிஸ்ட்ரி அசைன்மெண்டா
கொஞ்சம் உன்னுதைக் கொடு
ரெஃபர் பண்ணிக்
காப்பி அடிச்சிக்கிறேன்.
--மீனாட்சி டிஃபன் என்ன ?

இன்னைக்குத்தானா
ப்ரொஃபசர் டெஸ்ட்?
சுதா சுதா
படிச்சதெல்லாம்
ஷார்ட் நோட்ஸா
சொல்லு சுதா..!
--காண்டீன்ல கமகமக்குது..

சம் டிஸ்கஷனா ?
க்ளார்க்ஸ் டேபிள் கொண்டு வரலையே
கிளாஸைவிட்டு வெளியே போ
ஜாலியாய் நகம் துப்பி
வேடிக்கை பார்.
--கவாஸ்கர் இப்ப என்ன செய்வார்.?

தொலைஞ்சுது. !
ஸூ ரெக்கார்ட் மறந்துபோயிட்டேன்
வரைய
--மனமே மிஸ் மரியாவை மற. !
மல்லிப்பூவைச் செருகி
மகிழ்ச்சியாயிரு.

மேஜர் அப்சர்வேஷன் நோட்டுக்கு
கால்குலேஷனா ?
--கொஞ்சம் இரு
உமா அழகாப் புடவை கட்டி இருக்கா

என்னைக்கும் லாப்லதானா
ப்ராக்டிகல்ஸ்.
யூ டி ல ( UNDER TREE ) ல வைக்கணும்னு
ஸ்ட்ரைக் பண்ணா என்ன.?
--அச்சோ இனிமே நான்
பி எஸ்ஸி முடிச்சு
எம் எஸ்ஸி படிச்சு
எம் ஃபில்லைக் கடந்து
பி ஹெச் டி பண்ணனும். !

-- 1985 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

க்கும்... முடிந்த மாதிரி தான்...!

Thenammai Lakshmanan சொன்னது…

டிடி சகோ :) :) :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...