எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வேட்டையாடி வேட்டையாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேட்டையாடி வேட்டையாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 டிசம்பர், 2014

வேட்டையாடி வேட்டையாடி..



முன்பொரு நாள்
சந்தித்திருந்தேன்
சில முத்தங்களோடு
நெருப்புக் காற்றில்
நிரப்பப்பட்ட பலூனாய்
எந்நேரமும்
எங்கெங்கும் பறந்துகொண்டு
பின் தோல்பாவையாய்
ஆட்டுவித்திருக்கிறேன்.
தூண்டில் முள்ளில்
எனக்காக மட்டுமே
ஆடிக்கொண்டிருந்தாய்
வெவ்வேறு சபைகளும்
நடனங்களும் நான்
கண்டு களித்திருப்பது அறியாமல்.
வெறுமனே விட்டு விட்டு
வேறுதேசம்கூட
போய்விடுவேன் வேட்டையாட
வேட்டையாடி வேட்டையாடிக்
களைத்து வேர்வை பெருக்கெடுக்கத்
தேடுகிறேன் உன்னை
விட்ட இடத்தில் பதுமையான நீ
பழைய பேரன்போடு
எனை அணைப்பாய
உன் மேல்சீலையால்
என் முகம் துடைப்பாயா.

Related Posts Plugin for WordPress, Blogger...