எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தேவதை ரூபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவதை ரூபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 பிப்ரவரி, 2019

தேவதை ரூபம்.

பின்னிரவின் கனவில்
ஆவியைப் போல்
அலைகிறது நினைவு.
போர்வையைச் சுருட்டிப்
புதைந்து கொள்கிறது யட்சிணி.
வெளியேறும் வழியின்றி
படுத்துகிறது ஒரு பேய்.
பின்னும் விடியலில்
விழித்தெழுகிறது ஒரு பூதம்.
கண்கசக்கி விழிக்க
கண்ணாடியில் கையசைக்கிறது
ஒரு பிசாசு.
எத்தனையோ பார்த்தவன்
அத்தனையுடனும்
வாழத்துவங்குகிறான் ராட்சசனாய்
வெளிச்சம் விழத்துவங்க
இரண்டும் அவசரமாய்
தேவதைரூபம் தரிக்கின்றன.
  
Related Posts Plugin for WordPress, Blogger...