எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கறுப்பு மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறுப்பு மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

கறுப்பு மை.

எத்தனை ஊர்கள்,
எத்தனை வீடுகள்,
எத்தனை முகவரிகள்,
இருந்தென்ன
பெயருக்கென்று ஒரு
வாக்காளர் அட்டை,
வங்கிக் கணக்குக்காக
நாடுவிட்டு நாடு செல்ல,
சமையல் வாயு இணைப்புக்காக.
இன்னும் பயன் பலவுண்டு.
இருந்தும் ஒரு முறைகூட
நான் தீர்மானித்தது இல்லை
எனக்கான ஆட்சியாளரை.
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு,
கறை நல்லது என்றாலும்
தப்பித் தவறியும்கூட
ஆட்காட்டி விரல்
சுமந்ததேயில்லை
அந்தக் கறுப்பு மையை.

Related Posts Plugin for WordPress, Blogger...