எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வேதம் புதிது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதம் புதிது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

வேதம் புதிது.

வேதம் ஓதும்
சாத்தானைப் பிடித்திருந்தது..
வாழ்வின் ஆசைகளில்
நெருப்பை மூட்டுவததன் செயல்.
ஓடு,துரத்து, காமம் கொள்..
கிட்டாதாயின் தட்டிப்பறி..
நான் இப்படித்தான் எனச்
சாயம் அடித்துக் கொள்..
அண்டவிடாதே
அன்பெனக் கதறும் கிறுக்கர்களை..
உனக்கெனக் கட்டம்
கட்டியதை மீறு..
ரகசியங்களை அம்பலப்படுத்து.
முகமூடியையும்
கண்ணாடியையும் உடை.
பிம்பங்கள் சிதறி விழட்டும்..
பிடித்திருக்கிறது
பின்னொன்றாய்ப்
புதுப்பித்த சாத்தானை..
வேதம் புதிது..

Related Posts Plugin for WordPress, Blogger...