எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெறியின் கோட்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெறியின் கோட்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 மே, 2020

வெறியின் கோட்பாடு.

புறாக்களின் மாம்சத்தில்
கண்ணாயிருக்கின்றன வல்லூறுகள்
சிபிகளின் தராசுகளில்
நிறைவடைவதில்லை அவை.
கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்
மாம்சத்துக்கு மாம்சம்
ரத்தத்துக்கு ரத்தம்
இவையே வெறியின் கோட்பாடு.
விசிறும் இறக்கைகளில்
வழியும் ரத்தத்தில் தமக்குத்தாமே
சாமரம் வீசி நிறைவடைகின்றன அவை.
 
Related Posts Plugin for WordPress, Blogger...