எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வினையால் அணைதல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினையால் அணைதல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 மார்ச், 2013

வினையால் அணைதல்.

அச்சமூட்டுகிறது
மூன்றாம் நடவடிக்கை
தன்மை முன்னிலை
படர்க்கை..
முதுகுத் தண்டில்
குளிர் சுரமாய் நீள்கிறது
இருவரின் ரகசியத்துள்
படரும் மூன்றாம் கை.
பஞ்சதந்திரமாய்
ஜொலிக்கிறது
நரியின் விழி
நான்காம் கோணத்துள்.
முயல்கள்
குகை வாயிலில்
குவிந்த கைகளோடு
முணுமுணுக்கும் பிரார்த்தனை..
ஓநாய்ச் சூதின்
வினையால் அணைகிறது
முயலும் நரியும். 

Related Posts Plugin for WordPress, Blogger...