எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
யதார்த்தப் பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யதார்த்தப் பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 அக்டோபர், 2014

யதார்த்தப் பூ.

எனக்கு எல்லாமே
செய்திகளாகத்தான்
சொல்லப்படுகின்றன
உணர்வுப் பூர்வமாய் அல்ல.
என் தனிமை என்னால்
தவிர்க்கப்பட முடியாத ஒன்று.
என்பதை நான் புரிந்து கொள்ள
உணர்ந்துகொள்ள வேண்டும்.
விசுவரூபம் எடுத்திருக்கும்
இந்தத் தனிமையே
எனக்களிக்கப்பட்ட
வரப் ப்ரசாதம்.
யதார்த்திற்குக்
கனம் கொஞ்சம் அதிகம்தான்.
அந்தப் பூவைச் செருகிக் கொள்ளக்கூட
என் இருதயத்தில்
பிடிப்பில்லை  .

-- 82 ஆம் வருட டைரி. 
Related Posts Plugin for WordPress, Blogger...