எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புத்தகக் கவிதை. 1. நம்வாழ்வு. வெள்ளைப் பூக்களடி இவை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகக் கவிதை. 1. நம்வாழ்வு. வெள்ளைப் பூக்களடி இவை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 பிப்ரவரி, 2012

நம்வாழ்வில்.. வெள்ளைப் பூக்களடி இவை.. கவிதை.



கிணற்றடியில் குனிந்து
இருட்டறையில் அடைந்து
உள்நடையில் உடைந்து
தூணோரத்தில் ஒடுங்கிப்
போகும்
வெள்ளைப் பூக்களின்
கலங்கிய சிரிப்புக்களின்
எதிரொலிகள் -- இந்தப் பனித்துளிகளோ.?
மழுங்கிய நினைவுமுனைகளின்
நுனிப்புக்களில் சந்தோஷச் சுவைப்புக்கள்.
சிலநேரம் அசைபோடும்.
கைக்காரியம் பரபரக்கும்.
நிரந்தர இருள்களில்
தலையணை நனைப்புக்கள்.
விடியற்குளிரின்
பிரச்சனை வரவேற்புக்கள்.
நித்யம் நடக்கும்
சத்யசோதனைக்குப் பயந்து
மௌனத் தியானிப்புக்கள்.
குருட்டு நம்பிக்கையின்
கடுவழிப் பயணங்கள்.
கண்டதென்னவோ
கடும் பாலைகள்தான்.
உள்ளத்துள் எரிமலையை
விழுங்கிக் கொண்டு இது
எனக்குச் சுடவில்லையேயென
அக்கினிப் பூக்களைக்
குளிர்வித்துப் பரிமாறும்
”வெள்ளைப் பூக்களடி” இவை.

டிஸ்கி:- இந்தக் கவிதை 1.4.84 நம்வாழ்வு வார இதழில் வெளிவந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...