எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நீல மீனும் தங்கப் பறவையும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீல மீனும் தங்கப் பறவையும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 மே, 2013

நீல மீனும் தங்கப் பறவையும்..

மேக இறக்கையில்
செந்நிற அலகைத்
தீட்டுகிறது சூரியன்..

அலைத் தானியத்தை
அலசிக் கரை சேர்க்கிறது
நீர்த் துடுப்பு.

தங்கச் செதில் மின்ன
நீல மீனாய்த்
துள்ளுகிறது கடல்.

இரையெடுத்த சூரியன்
இறங்கித் துயில்கிறது
இரவுக் கூட்டுக்குள்.

இன்பமாய் அசைகிறது
அலையும் கடலும்
கடலும் அலையும்..

Related Posts Plugin for WordPress, Blogger...