எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நீயும் நானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீயும் நானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 அக்டோபர், 2014

நீயும் நானும்



மேகத்துள் துளிகளாய்
நீயும் நானும்
பிரிந்து உதிர்ந்து விடுவோமோ

புத்தகத்தின் பக்கங்களாய்
நீயும் நானும்
விலக்கி படிக்கப்பட்டு விடுவோமோ

திரிகளின் நாவுகளாய் நாம்
ஊமையாக்கபட்டு விடுவோமோ

நூலும் ஊசியுமாய் நாம்
கடமை முடிந்ததும்
கழன்று விடுவோமோ

குவிந்த மல்லிக்குள்
வாசமாய் நாம்
நுகரப்பட்டு விடுவோமோ

இமைமேல் முடிகளாய் நாம்
நீக்கப்பட்டு விடுவோமோ

Related Posts Plugin for WordPress, Blogger...