எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தாவணி மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாவணி மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

தாவணி மனம்



பாவாடை தாவணி பழசாகி விட்டது. பாத்திரக்காரனிடம் போட மனசில்லை. ஆசிட் பட்டதால் அதன் தோள்பட்டைக்காயம். ஊசிப்பஞ்சால் நூல் மருந்து ஒற்றியும் பிசிறுபட்டு நிற்கின்றது. 

உடல் தாவணி உள்ளத்தைப் போர்த்திக்கொண்டுதான் நிற்கின்றது. பாவாடையும் இறுக்க முடிந்துகொண்டுதான் இருக்கின்றது இருந்தாலும் குளிர்கின்றதே. 

உள்ளமே ஒரு குட்டைப்பாவாடைதான் மகிழ்ச்சியால் விரிந்து பம்மென்று விரியும்போது. காற்றடிக்கும்போது காலில் ஒதுங்கி, மழை பெய்தால் உடலை நனைத்து மண்ணில் மெதுமெதுவாய் செருப்பணியாமல் நடந்து தேய்ந்து போகும் உள்ளமும் ஒரு பாவாடைதான். தழைந்த பாவாடைதான். பாவாடையின் கால்களாய் மண் தின்று அழுக்கு அஜீரணம் பிடிக்கும் மனமும் ஒரு பாவாடைதான். 

கல்லில் முள்ளில் பட்டுக் கிழிந்து நசிந்து திரண்டு போகும் பாவாடை ஓரம்தான் மனமும். இடுப்பைச் சுற்றி இறுக்கமாய் அணைத்து தன்னிருப்பைச் சலசலப்பால் தெரிவித்துக் கொண்டிருக்கும் மனப்பாவாடை. பாவாடையை மணந்துகொண்ட தாவணியும் இணைபிரியாமல் ஒரு புறம் மூடி மறுபுறம் கரை ஒதுங்கும்., மனமும் சிந்தனையும்போல்.. 

சன்னக்காற்றில் கூடச் சலசலத்துத் திரியும் பாவாடை மனம். இறுக்கப் போர்த்தலில் கூட வேர்வையைக் குத்தும் குளிரை சன்னமாய் உணரவைக்கும் தாவணி மனம். 

பாவாடை தாவணி பழசாகி விட்டது. பாத்திரக்காரனிடம் போட மனசில்லை. பத்துக்காசுக்கெடுப்பானோ எட்டுக்காசுக்கெடுப்பானோ.

 
--80 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...