எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தன்னைத் தானணைத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னைத் தானணைத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

தன்னைத் தானணைத்தல்

நிறைவாய்ப் பொங்கிப் பொங்கி வழிகையில்
தனிமை தேடி ஓடுகிறது ஒற்றைக் கீற்றாய் நீர்.
வழியும் நீரில் தான் எந்த நீரென இனம்காண.

பிரிந்து தனித்துப் பாறையை
வெளிர் ஓவியமாக்கிய தடத்தில்
துயில்கிறது மௌனமாய்ச் சிலகாலம்.

மோனத்திலுறைந்த காற்றலைய
விழிப்பிலிருந்து மெல்லக் கசிந்தபடி
இறங்குகிறது சூரிய விரல் பற்றி..

பிரிந்த சுவடு தெரியாமல்
வேறொரு மடிப்பிலிருந்து இணைகிறது
பிரிந்த தன்னிலிருந்து தானணைத்து.

Related Posts Plugin for WordPress, Blogger...