எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சுயத்தோடும் சுயரூபத்தோடும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயத்தோடும் சுயரூபத்தோடும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 மார்ச், 2014

சுயத்தோடும் சுயரூபத்தோடும்.

ஒவ்வொரு கணத்திலும்
நேசிக்குமென்னிலிருந்து
வேறொன்றும் விளைகிறது..

ஒரு கணம் விலகி
சுயத்தோடும் சுயரூபத்தோடும்
கோரைப்பல் முளைக்குமென்னை
நோக்கி நீள்கிறது உன் புன்னகை.

பேச்சும் ஏச்சும் புகையாய்ப் பரவ
என்னின் பல பரிமாணங்களையும்
அவ்வப்போது வெளிக் கொணரும்
உன்னையும் உண்ணத் துவங்குவேன்.

மௌனமாய் ஒப்புக் கொடுக்கும்
உன்னை உண்டு கோபத்தீயடங்கி
சாம்பல் பூக்குமென்னை
மழையாயும் விழுந்து குளிர்விப்பாய்.

மண்ணோடு மண்ணாய்க்
கலந்து கிடப்போம்,
மதகுகள் உடைத்த
வெள்ளத்தில் மூழ்கி..

Related Posts Plugin for WordPress, Blogger...