எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காய்கனி சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காய்கனி சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 நவம்பர், 2026

காய்கனி சந்தை

26.காய்கனி சந்தை

 

காய்கறிச் சந்தை செல்லலாம்

பைநிறையக் காய்கனி வாங்கலாம்

கத்திரிக்காயும் வாழைக்காயும்

சாக்குப்பையில் கட்டிக்கிடக்கு

 

பலாப்பழமும் முலாம்பழமும்
பனம்பழமும் கொட்டிக் கிடக்கு.

கொய்யாப்பழமும் வெள்ளரிப்பழமும்
குமுட்டிப்பழமும் குவிஞ்சுகிடக்கு.

 

நாரத்தம்பழமும் நாவற்பழமும்

நாக்குக்கு நல்ருசியாம்

இலந்தைப் பழமும் பப்பாளியும்

உடலுக்கு வெகுநல்லதாம்.

 

மாதுளையும் வாழைப்பழமும்

குடல்புண் போக்குமாம்

திராட்சைப்பழமும் மாம்பழமும்

இதயத்தைச் சீராக்குமாம்.

 

ஆப்பிள் அன்னாசி ஆரஞ்சு

விட்டமின் சி நெறைஞ்சிருக்கு

ஊட்டச்சத்தும் தாதுப் பொருள்களும்

ஒண்ணுமண்ணாக் குவிஞ்சிருக்கு

 

கேரட் கண்ணுக்கு நல்லது
பீட்ரூட் ரத்தம் பெருக்குமே
கணக்குப் பாடம் போடவே
வெண்டைக்காயும் நல்லது

 

இரும்புச்சத்து நிறைந்த அந்த
சுண்டைக்காயும் சிறந்தது
தேங்காய் மாங்காய் பச்சைமிளகாய்

கோவைக்காய் உண்டால் நல்லது.

 

பீன்ஸ் பட்டாணி உண்டு வந்தால்
கண்ணின் ஒளி பெருகுமே
புரோட்டின் சத்து பெருகுமே
பிரண்டை பசியைப் பெருக்குமே

 

காய் பூவாம் காலிஃப்ளவர்
நல்ல ருசி கொடுக்குமே
கருணைக்கிழங்கும் சேனைக்கிழங்கும்
குடலைச் சுத்தம் செய்யுமே

 

உருளைக்கிழங்கு அதிகம் உண்டால்

உடலில் வாய்வைச் சேர்க்குமே

பரங்கிக்காயும் பாவக்காயும்

போட்டி போட்டு வருகுது.

 

புடலங்காயும் பீர்க்கங்காயும்

பின்னே ஓடி வருகுதே
கொத்தவரங்காயும் அவரைக்காயும்
ரத்தம் சுத்தம் செய்யுமே

 

கொத்துமல்லி புதினா கருவேப்பிலை

இரும்புச்சத்துக் கொடுக்குமே

இஞ்சி கொஞ்சம் சேர்த்துக்கொண்டால்
நல்ல பசி எடுக்குமே.

 

வாழைத்தண்டு கீரைத்தண்டு

செரிமானம் கொடுக்குமே

வல்லாரை மூளைக்கு நல்லது

கீரைவகைகள் கண்ணுக்கு நல்லது

 

மிகப்பலவாய்க் காய்கனிகள்

வாங்கிச் செல்வோம் வாருங்கள்

அவை களிப்புடனே கோர்த்து

நம்பின்னே வருவதை பாருங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...