எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஏப்ரல், 2016

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு.



எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு.

அமைதியானவள் என்பதால்
சாந்தி என்றேன் ; ஆனால் நீ
என் அமைதியைப் பறித்துக் கொண்டாய். !

பிரியமானவள் என்பதால்
பிரியா என்றேன் ; ஆனால்
சொன்ன மறுநிமிடம் என்னை விட்டுப்
பிரிந்துவிட்டாய். !
இனிமையானவள் என்பதால்
இனியவளே  என்றேன். ; இனி
அவள்தான் என ஆகும் வேளையில்
இனி அவள்தானோவென எண்ண
வைத்துவிட்டாய். !

கண்ணைப் போன்றதால்
கண்மணியென்றேன். என்
கண்ணல்ல இதயமே
நோகுமாறு குத்திவிட்டாய். !

கொள்ளையழகுப் பெண்ணமுதே
கோடி இன்பம் கொடுத்துவிடேன். !

எங்கே நீ சென்றாலும் அங்கே
உந்தன் நிழலாய்ப் பின் தொடர்வேன். !

சீச்சீ இந்தப் பழம் புளிக்குமென எண்ணாது
ஏணிபோட்டு ஏறிப் பறித்திடுவேன்.

படிப்பதற்கு ஒரு மனமிருந்தால் உன்னை
மறந்துவிடலாம்.

மறப்பதற்கு ஒர் உமனமிருந்தால்
உடனே படித்துவிடலாம்.

ஆனால் இருப்பதோ ஒரே மனம் !
நான் என்ன செய்வேன் !.

-- 83 ஆம் வருட டைரிில் ோழி சந்திக்காக எழியு. !!!!!! :) :) :)  .

Related Posts Plugin for WordPress, Blogger...