எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இது அயோத்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இது அயோத்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 மார்ச், 2015

இது அயோத்தியா?



இது அயோத்தியா?

இந்தப் புண்ணியபூமி
அயோத்தியில்லை.
இங்கே வாக்குத்
தவறிய இராமர்கள்.
ராவணனுக்காய்
ஏங்கி நிற்கும் சீதை.

வில்லொடிக்க மறந்து
திரியும் இராமர்கள்.
எங்கு பார்த்தாலும்
நூறுதலை ராவணங்கள்.
காட்டிக் கொடுக்கும்
செய்நன்றி கொன்ற
கும்பகர்ணன்கள்.

ஒரு விதத்தில்
இது அயோத்திதான்.
சகோதரனைக் கொல்லச்
சூழ்ச்சி செய்யும் சுக்ரீவன்கள்
கட்சிக்குக் கட்சி தாவும்
குட்டி விபீஷணன்கள்

பிறபுருஷன்மீது
மோகங்கொண்டலையும்
சூர்ப்பனகைகள்.

கத்திக்குத்தா மிரட்டலா
நன்றாய்ச் செய்யும்
ஆணையைப் பின்பற்றும்
முட்டாள் அனுமார்ச் சேவகன்கள்.

கடமை மறந்து
சுயநலமித்துக்கிடக்கும் சுக்ரீவன்கள். 

--80 ஆம் வருட டைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...