இதயச்
சதுக்கம்
இரவல்
அல்ல
பிச்சையும்
அல்ல
இரந்துபெற.
யாரும்
சுமந்து வராமல்
ஏற்கனவே
இருக்கும் இடம்
அதில்
உழைப்பும் வாழ்வும்.
புதிதாய்
உருவாக்கி
யாரும்
தரமுடியாது
யாருக்கும்
மண்ணை ..
முக்குளித்த
முத்துகள்
முள்ளிவாய்க்காலாய்.
சிதறிக்கிடக்கும்
மணிமாலை
தியானென்மென்
சதுக்கமாய்
எனது
உனது எல்லாம்
ஒரு
நொடியில் திசை மாற்றும்.
அகத்தை
தீபோல்
சுமந்து
அலைவதால்
அகதி.
எல்லார்
கதியும்
அகதியாகலாம்
ஒருநாள்.
கேள்வி
கேட்கவும்
வாதமிடவும்
வாயைத்
திறக்கவும்
உரிமை
கோரவும்
உரத்து
வாழவும்
உலகம் மாறட்டும்
உலகம் மாறட்டும்
மனிதர்கள்
சிதைக்கும்
இதயச்
சதுக்கம்
மனிதம்
சுமக்கும்
இன்பச்
சதுக்கமாகட்டும்.