ஒவ்வொரு நாளையும் துகிலுரிக்கிறது நாட்காட்டி. உரிக்க உரிக்க வெங்காயம் போல ஒன்றுமில்லாமல் போகிறது வாழ்க்கை. ஒரு ரயில் பிரயாணத்தில் சந்திப்பதாய் நகர்கிறது இணையின் துணை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நோக்கிப் பயணிக்கிறது புகையிரதம். விடியத் துவங்குகிறது சந்தியாகாலத்திலிருந்து தொடர்ந்த இருட்டு.