எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 நவம்பர், 2018

ராணித் தேனீ.

அவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது.
நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள்
ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள்.

கூடுகளைப் பத்திரப்படுத்தியபடி அலையும் அவளுக்கு
நீங்கள் வழங்கிய உணவைத்
தரையில் இருந்து எடுத்துத் தின்பது அசௌகர்யம்தான்

பிழியப் பிழியப் பல்சுவை தரும் அவள்
நீரை இன்னும் நக்கிக் குடிக்கப் பழகாதவள்.
அல்லதைத் தின்ன ஒவ்வாதவள்.

பசித்திருக்கும் அவளைச்
சாலையோர இலைச்சத்தங்கள்
சலனப்படுத்த வேண்டுமென்ற தாபம் புரிகிறது..

மூக்கின் நுனி ஈரமாக கன்னம் நனைக்கப்
பறந்துவரும் அவளை
பழக்கதோஷ நாயென்று நினைக்கலாம்.

கூடுகளை பிழியப்பட்ட அவளோ
இன்னொரு கூட்டைக் கட்டி ராணியானபின்னும்
நீங்கள் விரும்பியபடியே காட்சி தர விழைகிறாள். 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...