புரவி – ஜூலை 1 - 1985
எனக்கு வேண்டாம் உனது உபதேசம்:-
முகத்துக்காய் முகமன் கூறி
முகம் மாட்டித் தடம் போடும்
வேண்டாம் உனது உபதேசம்
கறைக்காய் அக்கறையெடுத்து
அருகு நெருங்கி வார்த்தை
அலங்கரிக்கும்.
வேண்டாம் உனது உபதேசம்.
காரியத்துக்காய்க் காரணம்
சொல்லும் அமைதிகள் செல்லும்
வேண்டாம் உனது உபதேசம்
இலைகளின் மஞ்சளில் ஒட்டி
உதிர்ந்து சருகாய்ப்
போகும்
வேண்டாம் உனது உபதேசம்.
காலங்கள் இலைகளோடு பழுக்கும்
உதிரும் மீண்டும் பச்சையிக்கும்
அடிக்கடி நிறம் மாறும்
வேண்டாம் உனது உபதேசம்.
வண்டிமேல் வண்டி நடக்க
எல்லாத் தடங்களும்
குப்பையாய்ப் பரவும்.
வேண்டாம் உனது உபதேசம்
கோமயத்துக்காய்த் திதி
நடத்தும் வேண்டாம் உனது உபதேசம்.
கொடுத்தலின் இன்பத்துக்கன்றி
ஞானத்தின் வெளிப்பாடுக்காய்ச் செய்யும்
எனக்கு வேண்டாம் உனது உபதேசம்
நிறுத்து உனது உபதேசத்தை.
-- 1985 ஆம் வருட டைரி.
-- 1985 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்....!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்....!
டிடி சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))