எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 ஜூன், 2015

சிகரெட் ஊசி.



இந்த மனிதர்கள்
சிகரெட் எனும் ஊசி கொண்டு
புகை நூலை நெருப்புக்காதுக்குள்
கோர்த்து வாயில் நுழைத்தெடுத்து
உடலைப் பொத்தலாக்கிக்கொள்ளும்
முட்டாள்கள்.

சிகரெட்டின் மறுமுனையிலிருந்து
தெறித்து விழுந்த நெருப்புக்கங்கு சொன்னது
ஒரு முனையில் நான்
மறுமுனையில் மரணத்தினை
முத்தமிடும் முட்டாளின் வாய்
காற்றை உறிஞ்சி உறிஞ்சி
அவனின் ஆயுட்காலமே
உறிஞ்சப்படுகின்றது.
மனிதனைக் குழிக்குள் புதைத்துச்
செல்லரிக்க வைக்கும்
இந்தப் பைசாச வழிகாட்டிகளுக்கு
முதலில் குழிபறிக்க வேண்டும்.


-- 85 ஆம் வருட டைரி  

4 கருத்துகள்:

காரிகன் சொன்னது…

இதை எத்தனை பேர் சிகரெட் புகைத்துக்கொண்டே படிக்கிறார்களோ தெரியவில்லை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதனால் மற்றவர்களுக்கும் ஆபத்து... தானே உடனே திருந்த வேண்டும்...

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் காரிகன்

ஆம் டிடி சகோ சரியா சொன்னீங்க.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...