எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 ஜனவரி, 2017

கல்லூரிக் காலத்தில் புத்தகங்களில் வெளிவந்த படைப்புகள்.



புத்தகம்  மாதம் வருடம்  ஆர்ட்டிகிள்   தலைப்பு.

புதியபார்வை               கவிதை. 






காம்போசிஷன் கவிதைப் போட்டி – மானுடத் தேடல்கள் – முதல் பரிசு. ( மகாகவியின் கவிதைகள் பரிசு பெற்றேன். )


மேரிலாண்ட் எக்கோஸ் 1985. ”சொர்க்கத்தின் எல்லை நரகம். ” சிறுகதை. 



ஒரு கட்டெறும்பு காட்டானையாகிறது.  – தியாகராஜா காலேஜில் நடந்த இண்டர்காலேஜியேட் காம்பெடிஷனில் மூன்றாம் பரிசு கிடைத்தது.  – பரிசு – தஞ்சாவூர்த் தட்டு.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

மீனு எத்தனை மீனு :-

மீனு எத்தனை மீனு :-

உருளைத் தொட்டி செவ்வகத் தொட்டி
மேலயும் கீழயும் உலாவித் துழாவி
முத்தம் கொடுப்பதாய் வாயைக் குவித்துச்
சுத்தம் செய்யுது சக்கர் மீனு.

கலர்க் கூழாங்கல்லும் போட்டு
கிணத்துத் தண்ணி ஊத்தி
காலை மாலை உணவைத் தூவு
காஞ்ச புழுவையும் கொஞ்சமா தூவு.

தங்க மீனு தேவதை மீனு
பூக்கொண்டை மீனு ஆபரண மீனு
கத்தி மீனு பென்சில் மீனு
கப்பி மீனு நெத்திலி மீனு

ப்ளாசம் மீனு ப்யூட்டி மீனு
டைகர் மீனு ரைடர் மீனு
எத்தனை மீனு  எத்தனை மீனு
அழகுக்கு மீனு அமைதிக்கு மீனு.

ஆரஞ்சுச் சுளையா அலையுது மோலி
கறுப்பு ஃப்ளைட்டா துரத்துது ஃபைட்டர் மோலி
அமைதியா சுத்துது ஆஸ்கார் மீனு
ஹை ஜம்ப் அடிக்குது அரோவணா மீனு

பட்டர்ஃப்ளை ஏஞ்சல் மீனுக்கு
உப்புத் தண்ணி வேணும்.
ஃப்ளவர்ஹார்ன் மீனு தலையில்
ஹாரனோட அலையும்.
சத்தமில்லாம சுத்தி நம்ம ஈர்க்கும்
ஓடுமீன்கள் பார்த்து மீன்போல் அலையும்
கண்ணுக்குப் பயிற்சி மனதுக்கு அமைதி
வீட்டுக்கு இதமா தொட்டி மீன் வளர்ப்போம்.


சனி, 31 டிசம்பர், 2016

பொருட்காட்சி :-

பொருட்காட்சி :- ( UNEDITED )

குட்டிப் பாப்பா குட்டிப் பாப்பா எங்கே போறீங்க
பொருட்காட்சித் திடலுக்குத்தான் போகுறேனுங்க.

பொருட்காட்சித் திடலுக்குப் போய் என்ன செய்வீங்க
ராட்டினத்தில் ஏறி உலகைச் சுத்திப் பார்க்கப் போறேங்க

ராட்டினத்தில் சுத்தியபின் என்ன செய்வீங்க
பலூன் பொம்மை பஞ்சு மிட்டாய் வாங்கப்போறேங்க.

பஞ்சுமிட்டாய் தின்ன பின்னே என்ன செய்வீங்க
பஃபூன்ன் மாமா பல்டி அடிப்பதை பார்த்துச் சிரிப்பேங்க.

பல்டி அடிப்பதை பார்த்த பின்னே எங்கே போவீங்க
பறவைக் கூட்டம், சர்க்கஸ் எல்லாம் பார்த்து ரசிப்பேங்க.

சர்க்கஸ் எல்லாம் பார்த்தபின்னே என்ன செய்வீங்க
குட்டியானை குரங்குக் குட்டி சிங்கம் பார்ப்பேங்க.

அம்மா கையைப் பிடித்துக் கொண்டு சென்று வாருங்க
அழகாய்ப் பொருட்காட்சித் திடலை ரசித்து வாருங்க.


வெள்ளி, 30 டிசம்பர், 2016

தொட்டிச் செடி வளர்ப்போம்.

தொட்டிச் செடி வளர்ப்போம் :- (UNEDITED )

பட்டுரோஸை ரசிக்கலாம்.
புதினா வாசம் பார்க்கலாம்
துளசி இலைகள் எட்டிப் பார்க்கும்
தொட்டிச் செடி வளர்ப்போம்.

காய்கறிக் குப்பையைப் போட்டு
மண்புழு உரம் கொஞ்சம் போட்டு
செம்மண் கொட்டி விதை தூவ
குட்டித் தொட்டி போதும்.

காலை மாலை நீரூற்றி
காயும் வெய்யிலில் சிறிது வைத்து
கண்ணும் கருத்துமாய் கவனித்தால்
கொள்ளை அழகாய்ப் பூ பூக்கும்.

ரோஜாப்பூவு தலையாட்ட
சாமந்திப் பூவு சாமரம் வீச
சங்குப் பூவும் இதழ் சிரிக்க
ஜன்னலோரம் செடி வளர்ப்போம்.

காற்றை சுத்தம் செய்யும்
வீட்டை அழகாய் மாற்றும்
அம்மாவின் சமையலுக்குதவும்
அருமையான செடிகள் வளர்ப்போம்.


வியாழன், 29 டிசம்பர், 2016

கண்விழித்தெழுந்திடு பாப்பா :-

கண்விழித்தெழுந்திடு பாப்பா :- ( UNEDITED )

கண்விழித்தெழுந்திடு பாப்பா
 கன்னுக்குட்டியும் கால் எட்டித் துள்ளுது.
கோழிகுஞ்சும் துறுதுறுப்பாய் அலையுது.
துள்ளிக் குதித்தே பள்ளிக்குச் செல்ல
கண்விழித்தெழுந்திடு பாப்பா .

கணக்கு ஒன்றும் கடினம் இல்லை
ஆங்கிலம் அறவே அந்நியம் இல்லை
விஞ்ஞானம் என்றும் அஞ்ஞானம் போக்கும்
வரலாறும் உனக்கு  வாழ்க்கையை போதிக்கும்.
தமிழோ உனக்கு அமிழ்தமாய் இனிக்கும்

ஆசிரியர்கள் உனக்கு அருமையாய்க் கற்பிப்பர்.
அன்பான நண்பர்கள் காத்துக் கிடப்பர்.
அம்மாவும் உனக்கு அருதுணையாய் இருப்பார்
கண்ணை இறுக்கும் சோம்பலைக் களைந்திடு
கண்விழித்தேதான் பள்ளிக்குக் கிளம்பிடு.

Related Posts Plugin for WordPress, Blogger...