எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

விதிமுறை



ப்ரபஞ்சக் க்ரகங்களுக்குள்
சின்னதாய்
க்ரகம் என்ற ஒரே
காரணத்துக்காய்
சுழல அனுமதிக்கப்பட்ட இது

இதனுள் நெருப்பில்லை
தகிப்பில்லை.
பாறைகள் மலைகளில்லை
யாரின் கால்களும்
இன்னும் படவுமில்லை.

சூரியனைப் பிரிந்தாயிற்று
சுழலுதலே விதிமுறையாம்

இதுவோ
எல்லாக் க்ரகங்களைச் சுற்றியும்
தன்னைச் சுற்றியும்.


மொக்கைக்கெல்லாம் முன்னோடி நாங்க. அப்பவே அப்பிடி.. :)

சின்ன வேலை:-

என் ஃப்ரெண்ட் ஜோதி கேட்டாள் ஏண்டி உன்னால இந்தச் சின்ன வேலையக் கூடவா செய்யமுடியலைன்னு. நானும்தான் கேக்குறேன். ஏங்க என்னால இந்தச் சின்ன வேலையைச் செய்யமுடியலைன்னு. பிறகு நான் அவளிடம் சொன்னேன். ஏண்டி என்னாதான் இந்தச் சின்ன வேலையைச் செய்யமுடியல. நீதான் என்னைவிடப் பலமானவளாச்சே. நீயாவது இந்தச் சின்ன வேலையைச் செய்யக்கூடாதான்னு. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணா நான் இந்தச் சின்ன வேலையை ரொம்பச் சீக்கிரமாய் முடிச்சுருவேன் அப்பிடீங்கிறேன். உடனே அவ இந்தச் சின்ன வேலையை முடிக்க நானும் கூட வேணுமாக்கும். ?

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

மழைக்கோல்

வெள்ளாட்டுக்குட்டிகளாய்
மேய்கின்றன மேகங்கள்.
துணைக்கு மேய்கிறது
மஞ்சள் வெய்யிலும்.
ஈரவால் குட்டியாய்
கொறிக்கிறது விழுதுகளை
ஊதக்காற்றும்.
மழைக்கோல் நனைக்கத்துவங்க
கிடைக்குள் அடங்குகின்றன வானவில்லாய்.

பழைய பத்து.



சூரியன் சுட்டெரித்தது கூட 
எனக்கு உறைக்கவில்லை. 
ஏனெனில் நம்பிக்கை விசுவாசமற்ற 
உன் வார்த்தைகள் முன் 
இந்தச் சூரியத்தகிப்பு எம்மாத்திரம்..?
0              0             0
பெண்களை எதற்காய் 
புஷ்பங்களோடு ஒப்பிடுகிறார்கள் என 
எனக்குப் புரிந்துவிட்டது. 
ஏனெனில் அவர்கள் சீக்கிரமே மலர்ந்து 
சீக்கிரமே வாடிவிடுகின்றார்கள்.
0              0               0
மலைகள் வெட்கமில்லாமல் 
தான் தோன்றித்தனமாக 
வளைந்து நெளிந்து 
மல்லாந்து உறங்குகின்றனவா.?
0              0               0
மரங்கள் கூச்சமில்லாமல் 
எங்குபார்த்தாலும் கைகளை நீட்டி 
யாசகம் கேட்கின்றதா. ?
0              0               0
தெருப்புழுதிப் புதுக்கவிதைதளின் 
தெருக்கூத்தைக் கண்டுதான் 
பதறிப்போய், கதறிப்போய்த் 
தற்கொலை செய்து கொண்டாயோ 
தன்மானக் கவிஞனே..!
0               0              0
மௌனம்தான் உன் தாய்மொழியென்றால் 
எப்போதும் அதையே 
பேசிகொண்டிருக்க வேண்டுமா அன்பே..?
0               0              0
மேற்பாரம் ஏற்றிக் 
கீழ்பாரம் இறக்கும் வேலையைத்தான் 
மனிதன் உருப்படியாகச் செய்கிறான்.
0                0              0
என்னை வெறுப்பேற்றும் இக்காலங்கள் 
உனக்கு வசந்த காலங்களாகத் தோன்றலாம். 
இது காலத்தின் குற்றமல்ல. சகியே. 
கண்களின் குற்றம்.
0                0               0
என் ஜன்னல்கள் 
விழியை மறந்துவிட்டன. 
தோழீ. 
விழித்தாலும் ஒளிர மறுத்துவிட்டன.
0                0               0
ஆழ்கடலில் தத்தளித்து 
அழகிய முத்தினை 
முக்குளித்து எடுத்து வருகையில் 
மூச்சுக்குப் போராட்டம். 
கைகொடுப்பாய் என நினைத்த வேளையில் 
ஏனிந்த சிறையெடுப்பு.. 
ஓ 
உன் கரங்களால் சிறைப்பட்டதால் 
பெருமையின் பூரிப்பு.
0                0               0 

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

தன்னைத் தானணைத்தல்

நிறைவாய்ப் பொங்கிப் பொங்கி வழிகையில்
தனிமை தேடி ஓடுகிறது ஒற்றைக் கீற்றாய் நீர்.
வழியும் நீரில் தான் எந்த நீரென இனம்காண.

பிரிந்து தனித்துப் பாறையை
வெளிர் ஓவியமாக்கிய தடத்தில்
துயில்கிறது மௌனமாய்ச் சிலகாலம்.

மோனத்திலுறைந்த காற்றலைய
விழிப்பிலிருந்து மெல்லக் கசிந்தபடி
இறங்குகிறது சூரிய விரல் பற்றி..

பிரிந்த சுவடு தெரியாமல்
வேறொரு மடிப்பிலிருந்து இணைகிறது
பிரிந்த தன்னிலிருந்து தானணைத்து.

Related Posts Plugin for WordPress, Blogger...