எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஜூன், 2024

ஒளிக்கீற்று

பாதையெங்கும் வெளிச்சம்
கூசும் கண்களோடு பயணிக்கிறேன்.

கொஞ்சம் ஓய்வெடுக்கக் கூட
இருட்டை விரும்புவதில்லை.

வெளிச்சத்தை விட இருளென்றால் 
அதி பயமெனக்கு.

வசப்படா கண்கள் தூக்கத்தில் ஆழும் போதெல்லாம்
கடவுளுக்கு அத்யந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்த இருள் தற்காலிகம்
ஆழ்ந்த நித்திரை ஆட்கொள்ளும் கட்டாயம்

அப்போதும் நம்பிக்கையுண்டு
வழிகாட்டியபடி ஒரு ஒளிக்கீற்று முன்செல்லுமென.

புதன், 1 மே, 2024

நீர்ச் சேணம்

மின்னல் லகானில் 
நீர்ச்சேணம் மறைக்கக்
கருமேகக் குதிரையை
செலுத்திக் கொண்டிருக்கிறது காற்று


செவ்வாய், 2 ஏப்ரல், 2024

கதகதப்பு

மூடிய கண்களின்மேல்
வெதுவெதுப்பாய்ப் பொழிகிறது வெய்யில்
உன் முத்தத்தின் கதகதப்போடு.

வியாழன், 21 மார்ச், 2024

நீள்குருவி நொடிமுள்


நீள்குருவியாய்ப் பறக்கிறது நொடி முள்
தட்டி விடப்பட்ட தந்திக் கம்பங்களாய் அசைகின்றன 
நிமிடமுள்ளும், மணிமுள்ளும்.

திங்கள், 11 மார்ச், 2024

மலர்தல்.

சூரியன் மலர்ந்ததும்
தாமரையும் மலர்கிறது
இரட்டை இலையோடு.
Related Posts Plugin for WordPress, Blogger...