எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 ஜூன், 2016

வண்ணத்துப் பூச்சி :-



வண்ணத்துப் பூச்சி :-

வண்ணத்துப் பூச்சியே !
ஓ!
வண்ணத்துப் பூச்சியே !
விண்ணில் பறக்கின்றாய் !
நீ கண்ணைப் பறிக்கின்றாய் !
விண்ணகத்துத் தாரகையோ ?
மண்ணினத்து மாணிக்கமோ >
பண்ணிசைத்து நீயுந்தான்
தண்ணொளி தருகின்றாய் !
ஓரறிவுதான் படைத்திருந்தாலும்
நீ உயரப் பறக்கும்போது
வண்ணங்களைக் கண்ணில்
கலக்கும்போது
ஆறறிவு படைத்த மனிதன்
அண்ணாந்துதான்
பார்க்க வேண்டியதிருக்கின்றது.

-- 85 ஆம் வருட டைரி 

செவ்வாய், 14 ஜூன், 2016

மேகத்தின் தாகம். :-



மேகத்தின் தாகம். :-

மேகப் பெண்ணே !
உன் காதலன் உன்னைப் பிரிந்து
எங்கே போய்விட்டானென்று
இப்படி அழுதழுது
உன்னையே நீ
மாய்த்துக் கொள்கின்றாய் >
உன்னுள்ளே அவ்வளவு
துக்கத்தையும்
அடக்கியடக்கிவைத்துக்
கொண்டிருந்தாயோ ?
நீ வெடித்து
அழும்போது தோன்றும்
சப்தம்தான் இடியோ ?
நீ வாய்விட்டு அலறிக்
கதறும்போது
தெரிகின்ற பல்வரிசைதான்
மின்னலோ ?
உன் மனதில் உள்ள கவலைக்
கருமைகள் எல்லாம்
கண்ணீராய் வடிந்தபின்
உன் மனம்
தும்பைப்பூவாய்
பஞ்சுப் பொதியாய்த்
தூய வெள்ளையாகி விட்டதோ ?
மேகப் பெண்ணே!
மன உறுதியை மட்டும்
பற்றுக்கோடாய் உன்னுடன்
எப்போதும் வைத்துக் கொள்.
என் போல்
ஒருபோதும் கோழையாகிவிடாதே.

-- 85 ஆம் வருட டைரி. 

திங்கள், 13 ஜூன், 2016

மழை :-



மழை :-

வானத்தாயின்
மேகச் சூலிலிருந்து
வெளிவந்து வீழும்
அதிசயக் குழந்தை.
நிலப்பெண்ணின்
அன்புக் காதலன்.
யாரும் பார்த்து
விடுவார்களோவென்ற
வேகத்தில்
நிலப்பெண்ணின்
பவள இதழ்களில்
தன் முத்திரையைப்
பதிக்கும் அவசரக் காதலன்.
நிலக் காதலியின்
உடலை வருடித்
தழுவி ஓடும்
ஆசைக்காதலன்.
நிலப்பெண்ணின்
அந்தப்புற நீலத்தின் ( கடல் )
அந்தரங்கங்களை அலச
ஆவலுடன் ஓிவரும்
குடும்பத்தலைவன்.
நிலவுப் பெண்ணின்
தாகம் தணிக்க
அவளைக் கார்ந்தர்வ
மணம் புரிந்து
செழிக்க வைக்கும்
அன்புக் கணவன்.

-- 85 ஆம் வருட டைரி.

நாலு பேர்



அன்பு உள்ளங்களே. !
நீங்கள் யாரையுமே
ஏன் உங்களைக் கூட
நீங்கள் நம்பாதீர்கள்.
ஏனெனில்
இன்பத்தில் பங்கேற்க
வருவோர்
துன்பத்தில் தலை மூழ்கி
விடுவர்.
நீங்கள் விருப்பப்படி
வாழ வேண்டுமானால்
நாலு பேர்
சொல்வதைக் கேட்காதீர்கள்.
அவர்கள் ஏதும்
சொல்லி விடுவார்களோவென
யோசிக்காதீர்கள். !
அந்த நாலு பேர்களுக்குப்
பயப்பட்டீர்களானால்
உங்கள்
ஆசைகளுக்குச் சிறை
போட்டு விடுங்கள்.

88888888888888888888888888888

-- 80 ஆம் வருட டைரி.

திங்கள், 6 ஜூன், 2016

புன்னகைப் பூக்கள். :_



புன்னகைப் பூக்கள். :-

நான் மேற்கொண்ட இந்த
மௌனத்தவத்தை
உன் புன்னகைப் பூவை
அர்ச்சித்து முறியடிக்க
முடியுமா ?
மணமேடை அமர்ந்திருக்கும்
புதுப்பெண்ணின் தலைபோல்
உன் உதடுகளில்
மென்னகை மெல்ல நிமிரவேண்டும்.
முக்காட்டை விலக்கி
எட்டிப் பார்க்கும்
நிலவு முகம்போல்
உன் புன்னகை என்னை
எட்டிப் பார்க்க வேண்டும்.
மாலை நேரத்து இளந்தென்றலில்
மெல்ல மெல்ல மொட்டவிழ்ந்து
கட்டவிழும் முல்லைப் பூப்போல
உன் புன்னகைப் பூ
பூத்துக் குலுங்க வேண்டும்.
பிறைச்சந்திரன் போல்
இதழ்விரிக்கும்
சிரிப்புப்பூ
சத்தமில்லாமல்
உதடுகளில் மெல்ல
உறைய வேண்டும்.
மெதுவாக
இதழ்பிரித்து
மௌனமாய்
உதடுகளுக்குள்ளே
குறும்பாய்ச்
சிரிக்க வேண்டும்.
புன்னகை என்னும் புதுவண்ணச் சிட்
மெதுவாகப் பறந்து வந்து
இதமாக உன் இதழ்களில்
அமரும் வேளை எப்போதோ
அப்போதுதான் என்
மௌனத் தவத்தின் முடிவும்.

-- 85 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...