டைரிக் கிறுக்கல்கள்.
குழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஞாயிறு, 22 ஜூலை, 2012
விடுவித்தல்..
தாங்கமுடியாமல் வந்து
தாங்கமுடியாமல்
வெளியேறினாய்
விடுவிக்க முடியாமல்
கிடக்கிறது வீடு.
வியாழன், 19 ஜூலை, 2012
வலைகள்..
சென்ற சூரியனையா..
வரும் நிலவையா ..
எதைப் பிடிக்கக் காத்திருக்கின்றன
இந்த வலைகள்..?
செவ்வாய், 17 ஜூலை, 2012
தவழ்தல்..
தங்கக் குழந்தையாய்
தவழ்ந்து செல்கிறது
பூமியின் மடியில் வெய்யில்.
இரவுப் பூக்கள்.
இரவைக் கண்டதும்
வெண்பூக்களை மலர்த்துகின்றன
கரண்டு மரங்கள்.
செவ்வாய், 10 ஜூலை, 2012
(சு)வாசம்..
வேகமாய் வந்து
வேகமாய் வெளியேறினாய்
உன் சுவாசம் இன்னும்
அலைகிறது இங்கு.
உன் வாசத்தோடு.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)