எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மனப் பொந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனப் பொந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

மனப் பொந்து.

ஊரெல்லாம்
என் பார்வை தேட
மனப் பொந்துக்குள் நீ.

சிரிக்காதே
என் மனசில்
விழுகிறது சுளுக்கு.

தொலைந்து போய்
தேடப்படாமல்
மண்ணில் புதைந்த
நாணயமாய் நீ.

இழந்தவன்
எப்போது வருவான்
மீட்டுக் கொள்ள.

நான் ப்ரியக் கூண்டின்
கொக்கிகளைக் கழற்றினேன்.
நீ பறந்து போனாய் எங்கோ.

டிஸ்கி.:- கல்லூரிக்காலத்தில் எழுதிய கவிதை. 31. 12. 85. 
Related Posts Plugin for WordPress, Blogger...