எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பூனை நடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூனை நடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 டிசம்பர், 2014

பூனை நடை:-



பூனை நடை:-

தேரைகளற்ற கல்லைச்
செதுக்கிச் சிற்பம்.
உளி கொண்டு அடித்து
சுத்தியல் கொண்டு அறைந்து
இழைப்புளி தோலுரிக்க
சுயமெல்லாம் உரிந்து
நியான் அறைகளுக்குள்
தனக்கென அற்றுப் பிறருக்காய்
துவாரங்களற்ற பொம்மையாய்
காட்சிப் பொருளாய்
பூனை நடையிடும்.

புல்பிடுங்குதலாய்
புருவம் செதுக்குதலே புண்படுத்த
அடிக்கடிப் புதுப்பித்தல்
செயற்கை அழகவஸ்தை.
கொடிகள் பின்னிய
கானக நதிகளில்
இயற்கை இழைத்துச்
சிரிக்கும் சாளக்கிராமங்கள்.
வாயோரம் முலைப்பாலுறைந்த
பச்சைக் குழந்தைகள்.  

Related Posts Plugin for WordPress, Blogger...