எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நர்சரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நர்சரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 டிசம்பர், 2014

நர்சரி:-



 நர்சரி:-

வெய்யில் தின்று
வளரும் பிறப்புகள்
போன்சாயோ பிரம்மாண்டமோ
பாலீதீன் பைகளுக்குள்
வெப்பக் கம்பிளியிலும்
மழை அருவியிலும்
இடம் பெயராமல்
அணைத்தும் குளித்தும்.

வளர்ச்சி என்பது
இடப்பெயர்ச்சி கொண்டதாய்
பருவமாற்றம் அடைந்து
பார்வை கவர்ந்ததெல்லாம்
பூத்துக்கிடந்ததெல்லாம்
பக்குவப்பட்டு வெளியேற
பிஞ்சிலே பழுத்ததும்
வேரிலே வெம்பியதும்
சூம்பிப் போய் ஓரத்தில்.

பைகள் மண் தண்ணீர் ஒன்றாய்
விதைகள் மட்டும் பலவாய்
முளைத்து விளைவதும் பலவாய்
வளருவதெல்லாம் சென்றுவிட
வேரோடிப் போனதெல்லாம்
தூரோடு தேங்கி
நர்சரிக்காரனின் துணையாய்.

Related Posts Plugin for WordPress, Blogger...