எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தண்டட்டிக்காரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தண்டட்டிக்காரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 மார்ச், 2019

தண்டட்டிக்காரி

வேலிப்படல் மறைக்கும்
வெண்பூசணிக்கொடி
கித்தான் படுதா உரசும்
கல்வாழைப்பூ
வெள்ளாட்டுக்குட்டியோடு
வயிறு சதைத்த வான்கோழி
கெக்கெக்கென குதூகலிக்க
வட்டிலிலே கஞ்சியோடு
வறுத்த கருவாடு உண்ணும்
தண்டட்டிக்காரியின்
குழல் அலசும் காற்றுக்கு
வேலிப்படல் தள்ளிப்புக
வேகமென்ன பத்தலையா
வெக்கமாகிப் போச்சுதாமா
வேலிக்கருவை பிடித்துக்
கால்தடுக்கி நிற்பதென்ன
வெய்யிலோ உள்நுழைந்து
வெதவெதப்பா நடப்பதென்ன
வேர்க்கும் சுங்குடியை
விசிறியாய் அவள் வீச
ஆசுவாசம் கொண்டு
அவள் வாசம் சுமந்த காற்று
மூச்சுப் பிசிறடிக்க
முந்தானையைப் பற்றுதம்மா
  
Related Posts Plugin for WordPress, Blogger...