எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சூரியனும் சுற்றிவரும் தூரம்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரியனும் சுற்றிவரும் தூரம்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

சூரியனும் சுற்றிவரும் தூரம்தான்

சூரியனும் சுற்றிவரும் தூரம்தான்:-
*************************************************

குடும்பத்தலைவிகள்
முகப்புத்தகத்தோழிகளாய்
பரிணாம வளர்ச்சியில்.

கிளைகளை நீட்டி
தன்னை எங்கெங்கும்
நிலைநாட்டி..

தோழிகளுடன்
அளவளாவுவதில்
கொஞ்சலும் பொய்ச்சண்டையும்.

சில தோழர்களுடன்
பழகுவதில் கொஞ்சம்
சிக்கல்களும்..

கற்பனைக் கோடுகளுடன்
பூமி குறிக்கப்படுவதான சாயலில்
லட்சுமண  ரேகையுடனும்.

எல்லா அட்சத்திலும்
சரியான பாகையில் சுற்றி
தீர்க்கமான ரேகையில்

துருவனை அச்சாக்கி
உருண்டு முடிக்கையில்
சூரியனும் சுற்றிவரும் தூரம்தான்
Related Posts Plugin for WordPress, Blogger...