எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கொட்டில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொட்டில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

கொட்டில்



குரலின் சாயங்கள்
சாயங்கால வெய்யிலாய்
நீர்த்துப்போய்க் கொண்டிருக்கின்றன.
கிளறிக் கிளறிக் கரம்பைகளில்
கருவைகளைப் பயிரிடுகிறார்கள்.
காற்றின் ஈரப்பதம் உறிஞ்சிக்
கோரைப்பற்களாய் அதன் முட்கள்
அகநிர்வாணம் மறந்து
புறநிர்வாணம் தேடியவன்
பல் பேழைக்குள்
அதைத் தூர்த்துத் தூர்த்து
ஆன்மாவின் கழிவறையாக்கி
முள்வேலிகளுக்குள் கொட்டிலிட்டவன்
முகம் கோழைக்குள்.

Related Posts Plugin for WordPress, Blogger...