எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஒரு கார்மேகம் உருவாகிறது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு கார்மேகம் உருவாகிறது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஆகஸ்ட், 2015

ஒரு கார்மேகம் உருவாகிறது.:-



ஒரு கார்மேகம் உருவாகிறது.:-

புறங்கையின் மச்சமாய்
விளக்குகையில் தெறிக்கும் சாம்பற்சிதறலாய்
நடுநெற்றியின் கருப்புப் பொட்டாய்
இமைக்குள் படபடக்கும் கருவிழி அலைச்சலாய்
பூத்துப்போன கரித்துண்டுகளாய்
ஆராய்ச்சிக்கூடத்தின் சில்வர் நைட்ரேட் சாடிகளாய்
மதிய நேரத்து மனித நிழலாய்க் குறுகி உருண்டு
மாலை நேரத்து மரநிழலாய் நீண்டு
போட்டோ நெகட்டிவ்களாய்
இருள் நேரத்து நதிக்கரையோர பூத நிழல்களாய்
நிழற்படங்களாய், முள்ளம்பன்றியாய்
குட்டி யானையாய் மாறி உருமாறிக்
கொண்டிருந்தது நீலவானின்
கருப்பு மேகம் ஒன்று.

-- 85 ஆம் வருட டைரி 

Related Posts Plugin for WordPress, Blogger...