இது
ஒரு கோழியின் கொக்கரக்கோ:-
இது
ஒரு சாகித்ய சங்கீதம்
இது
இசைக்கப்படுவது
இளநெஞ்சங்களின்
பொன்மஞ்சங்களில்
இது
ஒரு நேர்முக வர்ணனை
இது
கூறப்படுவது
குட்டை
மரங்களின் குறுநிழலில்
இது
ஒரு சதங்கை ஒலி
இது
குலுங்கி எழுவது
குமரிகளின்
வாயசைப்பில்
இது
ஒரு பொன்மலர்
இது
பூத்து வருவது
இறைவனின்
கையணைப்பில்
இது
இரு கவிதை வெள்ளம்
இது
பொங்கி வருவது
தமிழ்த்
தாயின் அரவணைப்பால்
தமிழ்
அன்னைக்கு அடியவளின் வணக்கங்கள்.!
இது
ஒரு கோழியின் கொக்கரக்கோ.!
தன்னம்பிக்கையை
முன்நம்பிக்கையாய்
முதல்நம்பிக்கையாய்க்
கொண்ட
கோழியின்
கொக்கரக்கோ.
இந்த
நம்பிக்கையை
அளித்து
வளர்த்த
ஃபாத்திமா
அன்னைக்கு வணங்கங்கள்.
எங்கள்
காலேஜ் ஓரங்கள்
சமுத்திர
தீரங்கள்
ஹாஸ்டல்
பகுதிகளே
கான்கிரீட்
கப்பல்கள்
எங்கள்
முதல்வர் அவர்கள் காப்டன்
வார்டனே
உதவி காப்டன்.
சிஸ்டர்களே
இதன் மாலுமிகள்
இதில்
3 வருடம் மட்டுமே
பயணிக்கும்
பேறு பெற்றவர்கள்
இந்த
மாணவச் செல்லங்கள்.
பயணியர்க்காகத்
தம் உழைப்பைக்
கொடுக்கும்
உண்மை ஊழியத் தொண்டர்கள்
எங்கள்
அட்டெண்டர்கள்
இவர்களை
அலைகளால்
அசைக்க
முடியுமோ ?
இவர்களைக்
கவலையலைகளால்
அசைக்க
முடியுமோ ?
நேர்வழியில்
செலுத்தும் காப்டன்களும்
மாலுமிகளும்
இருக்கும் வரை
இவர்களைத்
திசைதிருப்ப முடியுமோ?
இது
வாழ்க்கையின் கவலை அலைகள்
எட்டாத
எட்டமுடியாத இன்பத்தீவு !
இதில்
பயணிப்பவரில் சிலர் மட்டும்
சிலர்
மட்டுமே
பாதிதூரம்
பயணங்களிலேயே அந்தரத்தில்
கைவிட்டாற்போலத்
திருமணப் படகு
கிடைத்தவுடன்
குதித்துவிடுகிறார்கள்
ஹாஸ்டலோரத்தில்
இரயில் பாதை
பாதையின்
குறுக்குக் கட்டைகள்
போலத்தான்
நாங்களும்
அடுத்த
வருட முடிவில் நாங்களும்
இந்தப்
பரவஸமூட்டும்
இரயில்
சிநேகிதியை விட்டுப்
பிரிய
வேண்டுமென
நினைக்கையிலே
ஊதல் ஓசையுடன்
உள்ளே
புகும் இரயிலின்
நினைவுவந்து
நெஞ்சில்
தடம்
இடுகின்றது.
பத்துக்
கவுரவர்களின்
ஆயிரம்
பிள்ளைகள் போல்
எத்தனை
மரங்கள்
பனை
தென்னை மரங்கள்
அல்ட்ரா
மாடர்ன் ஸ்டைலில்
தலையை
வளர்த்திருக்கும் மரங்கள்
பரிட்சை
சமயங்களில்
கெபியைச்
சுற்றித்தான்
எத்தனை
மனன முணுமுணுப்புகள்
அதனால்தானோ
என்னவோ
கெபி
இருக்கும் மலையில்
அத்தனை
வெடிப்புகள்
எத்தனை
பிளவுகள்.
எங்கள்
கப்பலிலே ஏழுவகைப் பாகங்கள்.
முதல்
வருடத்தின்
முத்துக்குளிப்பு
MARY’S OWN இல்
முதிர்ந்தவரின்
முணுமுணுப்பு MADONA வில்
மூன்றடுக்கின்
உயரக் கர்வத்தில் LORETTO
மௌனத்தவத்தின்
உச்சியில் ANNOUNCIATA.
இரைச்சல்கள்
இறைந்து கிடக்கும் DINING HALL
தினமும்
ஒருவராவது முணகிக்கொண்டிருக்கும் SICK ROOM.
இறைவன்
தியானிப்பில் இனிய CONVENT.
இந்தக்
கப்பல் (HOSTEL) கப்பல்
கடல்
அலைகளில் மிதக்கவில்லை.
அது
தன்னம்பிக்கை அலைகளில்
அல்லவா
மிதக்கிறது.
இது
தன்னைத் தள்ளாட வைக்க விரும்பும்
சோம்பேறி
மூர்க்க அலைகளைத்
தள்ளாட
வைத்துவிடும்.
மூர்க்க
அடி கொடுத்துவிடும்.
இது
உறுதியானது.
இது
நிலையானது.
இதன்
பயணத்தின் சுவையை
எம்மைத்தவிர
யாராலும்
உணரமுடியாது
என்பதால்
கர்வப்படுகிறோம்.
இது
மாலைநேரக் கோழியின்
குறுகுறுத்த
கூவல் அல்ல
இது
சாம்பல்போர்வையை
விலக்கி
வரும் வெற்றிச்சூரியனை
வரவேற்க
ஒரு அசட்டுத்
தைரியத்துடன்
புறப்பிட்டு
விழிப்புக்கொண்டு
காத்திருக்கும்
ஃபாத்திமாவின்
ஹாஸ்டல்
கோழியின்
கொக்கரக்கோ.
-- 1985 diary