எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 மே, 2016

இதயம் வரை நனைகிறது :-



இதயம் வரை நனைகிறது :-

உதய நிலாக் காலம்
இதயம் விழாக் கோலம்
இமைக் கதவுகள் நாலும்
இழைக்கும் பார்வைப் பாலம்.
கண்ணீர்ப் பாலங்கள்
கலக்கும் பாலைகள்
கனவுக் சோலைகள்
கலங்கும் நேரங்கள்.
கற்பனைக் கவிதைகள்
கதறும் ஓலங்கள்.

8 8 8
உருவமில்லா அருவத்துடன்
உறவு.
ஆவியுடன் மோதுவது
பேசுவது போல் ஒரு உணர்வு.
 -- 80 ஆம் வருட டைரி.

திங்கள், 23 மே, 2016

கண்ணுக்குள் முள்ளை வைத்து :-



கண்ணுக்குள் முள்ளை வைத்து :-

ஓடுகின்ற தண்ணீரில்
படம் வரைந்து வரைந்து
பார்த்தாலும் அது
கலைந்து கலைந்து
போய்க்கொண்டேதான் இருக்கும்.!
வாய் முரிந்த பானையில்
சோறாக்கலாம். ஆனால்
ஓட்டைப்பானைன்னு ஆயிட்டப்பறம்
என்ன செய்ய முடியும். ?
மனப் பட்டம் பறக்கலாம்
உயர உயர…

ஆகா !
நூல் அறுந்து போச்சே !
என்ன செய்ய !
கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார்..

அளவுக்கு மீறின சந்தோஷத்தையும்
துக்கத்தையும் அடக்குறது ரொம்பக் கஷ்டம்.
ரொம்ப ஆபத்து.

வெள்ளைத்தை அணை கட்டலாம்.
ஆனா அது நாளையே
உடைப்பெடுக்காது
என்பதில் என்ன நிச்சயம்.

சுவரில் முட்டிய பந்துபோல்
அனுப்பிய கவலைகள்
சென்றதை விட
அதிவேக விரைவில்
எனைப் பற்றிக்கொள்ள
ஓடி வருகின்றன.

எங்குமே
ஏன் கடவுளின் ஆலயங்களில் கூட
நிம்மதி கிடைக்கவில்லை.

ஏனெனில் அவை கூட
இப்போது வியாபார கேந்திரங்களாக
மாறிவிட்ட காரணத்தால்.

 -- 80 ஆம் வருட டைரி. 
 

வியாழன், 12 மே, 2016

ஆழக்கடலில் அழகிய முத்தெடுத்து :-



ஆழக்கடலில் அழகிய முத்தெடுத்து :-

நினைவுப் பறவை பறக்கிறது.
எண்ணக் கூண்டுக்குள் தேடினேன்.
புரிகிறதா பெண்ணே உனக்கு. ?

ஆசைக்கடலில் அலையும் படகு நான்
பாசக் கடலில் பரிதவிக்கும் பிறவி நான்.

நானொரு சின்னச் சிட்டு
நீயோ கருடன்.

என்னால் உன் உயரத்துக்கு வர முடியாது.
எனவே எனக்காக நீ என் தரத்துக்கு
இறங்கி வாயேன்.

தெய்வங்கள் மனிதனாகலாம் ஆனால்
மனிதன் தெய்வமாக முடியாதே !
என்றும்
எப்போதும் நான் உணர்ச்சிபூர்வமானவள்
அப்படி வாழ்வதையே விரும்புபவள்.
நான் மகிழ்ச்சியுடன் வரும்போது
என் முகம் பார்த்துச் சிரிக்காமல்
மனதில் பூத்த மகிழ்ச்சிப் பூக்களை
அக்கினியில் வாட விடுகின்றாய்.

உனக்குள் ஏன் இந்தக் குரூரத்தனம்.?
இது எப்படிப் புகுந்தது உனக்குள் ?

நான் சந்தோஷத்தோடு என்
மன ஆசைகளைப்
பகிர்ந்துகொள்ள வரும்போது
சுள்ளென விழுந்து அதற்கு
சமாதி கட்டி விடுகின்றாய். !

நீயும் நானும்
சங்கமமாகும் நேரம்
என்னை ஆரவாரித்து அழைக்காமல்
உம்மென்று இருந்து என்
உற்சாகப் பறவையின்
காலொடித்து விடுகின்றாய்.
யாரிடம் இவ்வளவும் கற்றுக்கொண்டாய் ?
என்னை அலட்சியப்படுத்த யாருனக்குக்
கற்றுக் கொடுத்தது ?

என் கவிதைகளுக்கு
உண்மைக்கரு கிடைக்காமல்
கற்பனைக் கருக் கொண்டு கவியமைத்தேன்.
கவிதை இயல்பாயில்லை என்ற
குரலிருந்தது.

அதனால் தோல்விப் படிகளில்
வெற்றியுடன் ஏறிச் சென்று
கண்ணீர்ப் பாதையினால்
வழியமைத்துக் கவியமைத்தேன்.

இப்போது என் நெஞ்சுக் கீறல்கள்
சிந்திய குருதி அமைத்த
எழுத்துக்களைச்
சோகக் கவிதை சுவையெனப்
புகழ்கின்றார்கள்
படித்துச் சுவைக்கின்றார்கள்.

இரணங்கள் ஆறவில்லை
இன்னும்
இரத்தங்கள் காயவில்லை.

என் ஒவ்வொரு பிறப்பிலும் நான்
உன் பிரிவுத் துயரால் துன்பப்பட
வேண்டுமென்றே நீயும்
மறுபிறப்பு எடுத்து வருகின்றாயோ ?
இதுதான் ஜென்மத் தொடர்போ ?

- 83 ஆம் வருட டைரி. 

தேவனை ஏன் இன்னும் காணோம். ?



தேவனை ஏன் இன்னும் காணோம். ?

என் தேவன்
வந்து கொண்டிருக்கின்றானா ?
ஏன் இன்னும்
அவனைக் காணோம். ?

கால தேவனுக்கு
இறப்புக் கணக்குகள்
அதிகமாகி விட்டதா ?

ஆ!
இதோ என் எதிரில் தெரிகிறானே !
இதோ வருகிறான். !
என்னை நோக்கித்தானா ?
நான் அசைய முடியாதபடி
என்னை ஏதோ தடுக்கிறதே ?

ஆசைக் கயிற்றை வீசி
உயிரைப் பறித்துப்
பறந்தோடி விட்டான்.

உயிரற்ற உடல்
ஜீவனற்றுக் கிடக்கிறது.
உடல் உயிர் இருந்தாலும்
துடிக்கிறது.
இறந்தாலும் பிறரைத்
துடிக்கவைக்கிறது. !

-- 80 ஆம் வருட டைரி

புதன், 11 மே, 2016

விசுவாசமற்ற இதயம் :-



விசுவாசமற்ற இதயம் :-

நன்றி கெட்ட இதயம்.
இருப்பது என் உடலில்
நினைவெல்லாம்
உன் மீதில். !
சரி !
சிறிது நேரமாவது
அதை அடக்கிக் காட்டுவேன் எனச்
சவால் விடும்போது
முடியுமா உன்னால்
என்னையா உன்னாலா
மறப்பதா
முடியுமா
முடியக்கூடிய காரியமாக
வேறு ஏதாவது பார்
என அடுக்கு மொியென
துடுக்குக் கேள்விகளிட்டுக்
கெக்கிலி கொட்டிச் சிரிக்கின்றது.
உன் உருவம் என் முன்னே !

அதன் முன் என் சத்தியம்
சவால் எல்லாம்
அர்த்தமற்றுப் போய்
பொடிப்பொடியாய்
நொறுங்கித் தூசிகளாகிப்
பறந்து விடுகின்றது. !

-- 82 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...