எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

டியர் பிள்ளையாரே ! வணக்கம். !



டியர் பிள்ளையாரே ! வணக்கம். !

உன் முன் நான்
கரம் கூப்பி நிற்கும்போது
மகிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்.
சந்தனக் காப்பில் நீ ஜொலிக்கும்போது
உன் கையைப் பிடித்துத்
தரதரவென்று இழுத்துக்கொண்டு
உலகெங்கும் ஓடத் தோன்றுகிறது.
ஏழை ஐயர் போல் நீ
சிம்பிளாய் உட்கார்ந்து
காத்து வாங்கும்போது
வருகின்றாயா நொண்டி விளையாட
என அழைக்க நினைக்கின்றேன்.
எருக்கலங்கொழுக்கட்டையின்
வாசத்தை மட்டும்
உனக்குக் காட்டிவிட்டு
லபக் லபக்கென்று விழுங்கும்
இவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க
நாந்தான் உன் ரெப்ரசெண்டேடிவ்.
அதனால் என்னிடம்
கொடுத்துவிடச் சொல்லி
அவர்கள் கனவில் ஒரு
டூப் அடியேன்.
உனக்கு எப்போதும்
அலட்சியமாய்ச் சிரிப்பது தவிர
வேறொன்றும் தெரியாதா.
எதற்கெடுத்தாலும் என்ன ஒரு
உதட்டுச்சுழிப்பு வேண்டிக்கிடக்குங்குறேன்.
என்னமோ உனக்குத்தான்
சிரிக்கத்தெரியும் என்கிறார்போல்.
உனக்கு உடல் தசைமலையாக இருந்தாலும்
ஒவ்வொரு அணுவிலும் அறிவு
கொட்டிக்கிடக்கின்றது.
உனக்கும் எனக்கும் க்யூப்
சால்வ் பண்ணும் போட்டி வைத்தால்
நான் தான் ஜெயிப்பேனாக்கும்.
நீ ஆற்றங்கரையில்
உல்லாசமாய் அமர்ந்து
குளிக்கவரும் பெண்களை
எல்லாம் கவனித்ததோடல்லாமல்
சித்தியையும் புத்தியையும்
இரு தொடையிலும் அமரவைத்துகொண்டு
நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்
பெண் கிடைக்கவில்லை என்று
முழுப்பூசணிக்காயைச் சோற்றில்
அமுக்கிப் பொய் சொல்கிறாய்.
இத்தனைக்கும் அரசன் முதல்
ஆண்டிவரை எல்லாரின்
முதல் சல்யூட்டும் உனக்குத்தான்.
எத்தனை பேருக்கு வேலைக்கு
சிபாரிசு செய்கின்றாய்.
அட்மிஷன் மினிஸ்டர்
வருமான பாதுகாப்புக் கர்த்தா
எல்லாம் நீதான்.
குருவி உட்காரப் பனம்பழம் விழுந்தகதையாய்
நீ சுண்டுவிரலைக்கூட அசைக்காமலிருக்க
உன்னால்தான்  நடந்ததென்று கூறி
தேங்காய் உடைத்துப் பாலால் தேனால்
சந்தனத்தால் அபிஷேகம் செய்கின்றார்களே
இந்த முட்டாள் ஜனங்கள்.
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.
இவர்களை முதலில் உதைக்க வேண்டும்.
இதனால் உன் சிரிப்பு
உறைந்துபோய்விட்டதோ.
சரி. உன் வாசத்தைப் பற்றி எழுது.
நாம் என்றைக்கு ஓடிப்பிடித்து
விளையாடலாம் என்பதற்கு
ஒரு கடிதம் போட்டுவிட்டு வா.
இப்படிக்கு அன்புடன்
WITH TONS AND TONS OF LUV
EVER YOURS S.T.

-- 80 ஆம் வருட டைரி

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

குதிரைகள்:-



குதிரைகள்:-

இவைகள் இலக்கை நோக்கி
எறியப்பட்ட அம்புகள்.

குறியை அடைய
சுயகட்டுப்பாடாய்
கண்களைச் சேணத்தில்
உட்படுத்திகொண்ட குதிரைகள்

ஆவேசக் கனைப்புகள்
இதழ்க்கடை நுரைதள்ள
முட்டாள்தனமாய்
முட்டி பெயர்த்துத்
தட்டிவிழும் குதிரைகள்.

காற்றின் நர்த்தனமாய்
நளினமாய்ப் பாயும் குதிரைகள்.

சுய லயிப்புடன்
சேணம்துறந்து
கடமை மறந்து
பச்சைப் புல்லை
இச்சித்துத் தின்னும்
சோம்பேறிக் குதிரைகள்.

கிட்ட நெருங்கவிடாமல்
மூச்சை இறைத்து
முகத்தைச் சுருக்கி
வெறுப்பால் உறுமும் குதிரைகள்.

அலையின் அலைச்சலாய்
அலைந்துகொண்டே இருக்கும்
உழைப்புக் குதிரைகள்.

கானலைப் பிடிக்கத்
துரத்திக்கொண்டே இருக்கும்
ஏமாற்றக் குதிரைகள்

துக்க உருக்கல்களிலும்
இன்ப வெளிச்சத்தைப்
பார்க்கும் ( பிடிக்கும் )
சந்தோஷக் குதிரைகள்.

பிடரி சிலிர்த்து
முன்கால் தூக்கி
முகத்தை மிதிக்க வரும்
அதிமேதாவிக் குதிரைகள்.

சின்ன இலக்குகளை
எட்டிவிட்ட சந்தோஷங்களில்
கனைத்து அழைக்கும்
அப்பாவிக் குதிரைகள்.

கண்ணைச்சிமிட்டி
மெதுவாய் அழைத்து
இன்பத்தைப் பகிர்ந்தளிக்கும்
சினேகக் குதிரைகள்.

தொட்டதெற்கெல்லாம்
மெல்லச் சிணுங்கும்
பிள்ளைக்குழந்தையாய்
சிட்டுக் குதிரைகள்.

தட்டிக் கொடுத்து
ஏறி அமர்ந்தால்
பாய்ச்சலாய்ச் சென்று
இலக்கில் இறங்கும்
வழிகாட்டிக் குதிரைகள்.

நடுவழியில் குப்புறத்தள்ளி
குழியைத் தோண்டி
மூடிப் புதைத்து
மௌனமாய் இருக்கும்
மோசக்கார நயவஞ்சகக் குதிரைகள்.

குதிரைகள் குதிரைகள்
குதிரைகள்
காற்றிலலைந்து
ஓடுவதற்கென்றே
சபிக்கப்பட்ட
ஏமாளி ராஜாக்கள். .


திங்கள், 10 ஆகஸ்ட், 2015

சுய போதனை:-



சுய போதனை:-

மனசுள்ளே மூடி மூடி
மக்கிப் போனாய் நீ
முடி திற
காற்றிழு விட்டுவிடு
மீண்டும் புதுக்காற்றிழு.

மனமே
ப்ரியமாயிருந்திருந்து
நீ பெற்றுக்கொண்டதென்ன ?
கனிந்து கசிந்தது போதும்
கல்லாயிரு.

தப்பு உன் மேலில்லாதபோது
தரம் குறைத்துக் கொள்ளாதே;
தூசியாய்த் தட்டி விடு
அத்தனையும்
பறந்து போகட்டும்.

மற்றவர்களை
மகிழ்ச்சியாக்கி
நீ சாதிக்கப்போவதொன்றுமில்லை
நீயே சந்தோஷமாயில்லாத போது

மனமே
சிந்தனை குழப்பாமல்
சும்மாயிரு
உன் மேல் ப்ரியமாயிரு
உன்னை சந்தோஷமாக வைத்திரு
யார் வார்த்தைக் கல்லெறிந்தாலும்
உன்னைத் தாக்காது.
தப்பு உன் மேலில்லை
மனசே
சாந்தமாயிரு
ஜெயிப்பாய்.

-- 84 ஆம் வருட டைரி. 

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

பிரிவோம் சந்திப்போம்.



மதுரை வெடிகுண்டு சம்பவம். பார்சல்.

ஸ்திரமான நம்பிக்கை நம் நெஞ்சுக்குள் வலிய வந்து வெற்றிகள் நம் தோள்களில் வீழும். திறமைகளே திடமான படிக்கட்டுகளாகும்.

செவெரலலில் தொடங்கும் ஸ்பீட் ஃபர்ஸ்ட் பேப்பர் – ஸ்டேட்மெண்ட். ப்ரோ லெட்டர், ஆஃபீஸ் லெட்டர், அக்கவுண்ட்ஸ் & எக்பெண்டிச்சர் சேல்ஸ், மெக் மார்ச் 5 .
ஒரு இனிய ஸ்நேகிதத்துடன் கடிதங்களில் ப்ரியமாய்க் கைகோர்த்து நடைபோட ஐ அம் அ லக்கி ஒன். தற்காலிகப் பிரியல்களுடன். பிரியங்களுடன்.

நிஜமும் நிழலுமாய் நாம். எந்த வெளிச்சம் பட்டாலுமே பிரிக்கவியலா ஸ்நேகம். சூரிய வெப்பமும் சுடர்நிலவின் தட்பமுமா நிழலை வருத்துவது. ? நமக்குள் நாமே இருக்கையில் பிரிவுகளேது. ?

காவியமது, க்ரேட் மாது மது, மதுரைத் தேன் + அம்மை, ஞானப்பால் கொடுப்பவள்.

எந்தக் காற்றுக்கும் இந்தப் பூக்கள் உதிர்ந்திடக்கூடாது என்பது என் எண்ணம். ஓ காம்புகளே மரக்கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் காற்றென்ன செய்யும். !

சிவந்த மேனிக்குக் கறுப்பு அங்கி. நம்பியார் கொடியேற்றிய பள்ளி. எம் திருநகர் மக்கள்.

நிழல்கள் 5 வது முறை. கவிஞர் இராஜசேகர் சூப்பர்ப். ஹரி – மனசு நிறைய்ய கனவுகள் சுமந்த காரக்டர், பாராவின் பரம விசிறி. சினிமாட்டோகிராஃபி கல்யாண்குமார்.  மணிவண்ணனின் உதவியாளர்.

இலட்சியக் கனவு ( மகாராணி பின்னர் ) அங்கெப்படி. ? குடை மிகவும் பிடித்தது. வெய்யில் பூசி மினுமினுக்கும்.

பிரிவோம் சந்திப்போம். நன்றி சுஜாதா.


Related Posts Plugin for WordPress, Blogger...