எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பிறந்தநாள் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்தநாள் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 நவம்பர், 2015

பிறந்தநாள் வாழ்த்து



பிறந்தநாள் வாழ்த்து:-

நீடு நீ வாழ வேண்டும்
நின் வாழ்வு நலமாக வேண்டும்.
நல்ல வழிகாட்டியாய்
உரிமையுடன் அடக்குவதில் அக்காவாய்,
நல்வழிப்படுத்துவதில் ஆசானாய்,
நன்மைபல செய்து
நான் நன்றி கூறமுடியா உயர்வினாய்
விளங்கிட்ட நீ,
இல்வாழ்வில் அரசியாய்
கலைகளின் செல்வியாய்
இரப்போர்க்கு ஈயும் தாயுமாய்
இறைவணங்கிப் பல்வளங்களும்
பெற்று வாழ வாழ்த்தும்
உன் அன்புத் தங்கை. 

-- 83 ஆம் வுட ாழ்த்ு :) 

வெள்ளி, 19 ஜூலை, 2013

வாழ்த்து.

அம்மா முத்து அப்பா ரத்தினம்..
முத்து நவரத்தினமும்
புன்னகையில் ஜொலிக்கும்
சித்தப்பாவோ மாணிக்கம் ..
கோதையப்பத்தாவின்
செல்லமான நெல்லியான்
சீர்மிகு செல்லப்பனாகி
ராமசாமிஐயாவின்
குலம் தழைக்கச் சென்றார்.

குத்து விளக்காய்ச் சுடர்விடும்
வள்ளி என் தங்கையும்
குன்றின் விளக்காய்ப்
ப்ரகாசமாய்ச் சிரிக்கும்
ஸ்கந்தப் பழமும் பெற்று
நிழல்போல பின் தொடர்ந்து
இன்னொரு தாயாய்க் கனிவு காட்டும்
சித்திரச் சித்தியோடு
நெல்லிமரத்தான் அருளால்
நூறாண்டு வாழ்க..



திங்கள், 18 பிப்ரவரி, 2013

நேயமே நீ வாழ்க..

நேயத்தால் ஆனது உலகு.
நட்பினால் பூக்கும் மனது.
அகமும் புறமும்
அன்பும் நட்பும் தழைத்திட
சாம்பவியும் சங்கரனும்
சந்ததி பெருகி வாழ்க.
நேரிசையில் இசைந்து
நேயமித்ர.. நீ வாழிய பல்லாண்டு



Related Posts Plugin for WordPress, Blogger...