எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தாம்பத்யக் குகை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாம்பத்யக் குகை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஜனவரி, 2013

தாம்பத்யக் குகை.

உனக்குத் தெரியாமல்
உன்னை அரவணைத்திருக்கின்றன
என் கைகள்.
நீ சண்டையிடுவதையும்
மண்டியிடுவதையும்
காதலாக்குகிறது மனம்
உன் அன்பைப் போல
கோபமும் ருசிக்கிறது
வெந்நீர் ஊற்றுக்களாய்
குமிழ்விடும் உன் கோபம்
தகிக்கிறது என்னை.
கதகதப்போடு
முடங்கிக்கிடக்கும்நான்
உன் அன்பின் கைகள்
என்னை மூழ்காமல் பிடித்தபடி
நீள்வதை உணர்கிறேன்.
விடிகாலைப் பனியில்
வாசனையற்ற ஆவியாய்
நம்மையறியாமல்
வெளிப்படுகிறது இதம்.
யுகங்கள் பலவாய்
பனிப்பாறைகளாகவே
வாழ்ந்து மடிகிறோம் நாம்
தாம்பத்யக் குகையைக் காத்தபடி.
Related Posts Plugin for WordPress, Blogger...