எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இருட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இருட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 மார்ச், 2016

இருட்டு.:-



இருட்டு.:-

எறும்பாய் ஊறும்.
தவிடாய் அப்பும்.

மை டப்பாவை
மூஞ்சியில் திணித்தாற்போல
கடலோரக் கரைப் பகுதியாய்
நிலத்தைவிட உயரம் காட்டும். 
கடலாய் பயமுறுத்தும்.

பயங்களையும்
சந்தேகங்களையும் விழுங்கி
அடைத்து வைத்துக்கொண்டிருக்கும்.

பஞ்சாலையின் அழுக்காய்
நுரையீரலில் பயம் சேர்க்கும்.
சுவாசம் நிரப்பும்

மன இருள்
கெட்ட எண்ணம் கண்டு
வெளிச்சம் விரட்டி
உடல் சாப்பிட்டு
மனித மூளை கொறித்துக்
கொக்கரித்துக் கிடக்கும்.

இது புற நிகழ்வல்ல.
அகநிகழ்வின்
வெளிப்பாடு.

-- 85 ஆம் வுடைரி 

வியாழன், 5 நவம்பர், 2015

இருட்டு.



இருட்டு :-

எதிரே ஒரே இருட்டு.
எதிர்காலமும் அப்படியோ ?
மனதில் பூக்கும்
சின்னச் சின்னச்
சந்தோஷப்பூக்களை அழிப்பதில்
இந்த அக்கினிதேவனுக்குத்தான்
என்ன ஆனந்தம். ?
அவள் கண்ட ரோஜாவில்
முள் மட்டும் அவள் பக்கம்
அந்த அழகு ரோஜாவை
அவள் தன் மனதில்
இருத்திக்கொள்ளத்தானே விரும்பினாள்
அதனை இதயக் கோயிலில் வைத்து
ஆராதனை செய்யத்தானே
ஆசைப்பட்டாள்.
அந்த அழகு ரோஜாவுக்கு
அவளிடம் அப்படி என்ன கோபம். ?
தன் பணம், அழகு, மென்மை,
இதம், அன்பு, குணம்,
ஆசை அனைத்தையும்
காண்பிக்காமல் தன்னிடத்தில் உள்ள
சுருக்கென்று தைக்கின்றார்போல்
குத்துகின்ற முள்ளை மட்டும்,
முள்ளைமட்டுமே காண்பிக்கின்றது.
பரவாயில்லை
அந்த ரோஜாவுக்கு என்னுடைய
அன்புமனம் புரியாவிட்டால்
பரவாயில்லை.
அவள் அந்த அழகு ரோஜாவின்
மனத்தை, மணத்தை, கற்பனையிலேயே கண்டு
களித்து உறவாடி மகிழ்ந்து விடுவாள்
அந்த நினைவு ஒன்றே
அவளுக்குப் போதும்.
காலம் முழுமையும்.

-- 80 aam varuda diary 

Related Posts Plugin for WordPress, Blogger...