எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இந்த மரத்தின் வேர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்த மரத்தின் வேர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜனவரி, 2013

இந்த மரத்தின் வேர்கள்.

இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை
அடுத்தடுத்து வெட்டுப் பட்டபோதும்
நீர் மறுக்கப்பட்ட போதும்
நிழலை சுருக்கிக் கொண்டதில்லை.

இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை.
முண்டு முடுச்சுகள் செதுக்கப்பட்டபோதும்
முள்ளெலிகள் குடைந்தபோதும்
உடையாத உரம் பாய்ந்தவை.

இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை.
காற்று அசைத்தபோதும்
கனல் சிதைத்தபோதும்
மூழ்கிப் போவதில்லை.

இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை.
எல்லா நன்மைகளும்
எல்லாத் துன்பங்களும் கடந்து
யுகங்களாய்க் கிளைப்பவை.

இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை
ஒரு நிமிட பெயர்த்தல்கள்
ஒரு கணத்தின் சலனங்கள்
கடந்தும்  உயிர்த்திருப்பவை.
Related Posts Plugin for WordPress, Blogger...