எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

நவரசம்.

*எதனாலும் உன்னால்
வீழ்த்த முடியாது என்னை.
நான் தாங்கி இருப்பது
அன்பெனும் பேராயுதம்..

*வாழ்வின் பக்கங்களில்
அர்த்தம் தேடிச் சலிக்கிறது
மனம்

*வெறுப்புமிழ்ந்து செல்கிறது
மனப்புழு.
உழல்வதன்முன்னும்பின்னும்
கசப்பின் கரகரப்போடு நீள்கிறது
உண்டதன் மிச்சம்.


*பசிய ரேகைகளாய்
சுருங்கிக்கிடக்கிறது
குளத்தின் வயோதிகம்.


*வண்ணச்செதில்களாய்க் கட்டிடங்கள்

இரவில் நீந்திக்கொண்டிருக்கின்றன
கரையோர நீரில்.
 
*எல்லார் கரத்திலும் ஒரு கண்ணாடி
உலகைப் பார்க்க அல்ல
தன்னை மட்டுமே பார்க்க
 
*விளையாடும்போது
சேர்த்துக்கொள்ளும் குழந்தைகள்
வேகப்படும்போது விட்டுவிடுகிறார்கள்.
  
*பொம்மியின் கைப்பிடியில்
பொம்மை அகப்படும்வரை
நான் அவள் கைப்பொம்மை.
 
*அன்பைத் தேடுமிடத்தில் ஞானமும்
ஞானம் தேடும் இடத்தில் அன்பும் கிடைக்கிறது.
 
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...